திருவள்ளூர் மாவட்டம் நந்தவன மேட்டூர் நேதாஜி தெருவை சேர்ந்த தம்பதி கவுதம்-பிரியா. இவர்களது 5 வயது மகள் ரூபாவதி. ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த ரூபாவதி, ஃபிரிட்ஜை விளையாட்டாக திறந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, சிறுமி மயங்கி விழுந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய், ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்தாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, ஆவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“