மத்திய அரசு நடத்தும் தொலைத் தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் ஆகியவற்றுக்கான இணைப்பு மற்றும் புத்துயிர் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு அறிவித்தது.
Advertisment
4 ஜி சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் நிர்வாக ஒதுக்கீடு, மத்திய அரசால் நீட்டிக்கப்பட்ட இறையாண்மை பத்திரங்கள் மூலம் கடன் மறுசீரமைப்பு, விருப்ப ஓய்வூதியத் திட்டம் (வி.ஆர்.எஸ்) மூலம் பணியாளர் செலவினங்களைக் குறைத்தல் மற்றும் சொத்துக்களைப் பணமாக்குதல ஆகிய நான்கு உத்திகளையும் எடுத்துரைத்தது.
ஊழியர்களைக் குறைப்பதன் மூலம் செலவைக் குறைக்கலாம் என்று கருதி விருப்ப ஓய்வுத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதனையடுத்து, கடந்த ஜனவரி 31 ஆம் தேதியன்று இந்த இரு நிறுவனங்களில் இருந்து மட்டும் சுமார் 92 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வை பெறுகின்றனர். அதாவது மொத்த ஊழியர்களில்(1,53,786) 50% க்கும் அதிகமான ஊழியர்கள் பணி விலகியுள்ளனர்.
Advertisment
Advertisements
பிஎஸ்என்எல் சென்னை வட்டத்தில் மொத்தமுள்ள 5,500 பணியாளர்களில், பல்வேறு பதிவிகளில் இருந்த 2,600 ஊழியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை விருப்ப ஓய்வு பெற்றிருக்கின்றனர்.
சென்னை வட்டத்தில் இயங்கும் 3 லட்சத்திற்கு அதிகமாக பிராட்பேண்ட் இணைப்புகளையும், 20 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் இணைப்புகளையும் தொடர்பான குறைகளை 2900 பிஎஸ்என்எல் ஊழியர்கள் தான் கவனித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை வட்டத்தை தாண்டி, ஒட்டு மொத்த தமிழகத்தில் பிஎஸ்என்எல் 10,000 ஊழியர்கள் பணியாற்று வந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இதில் 5,300 பிஎஸ்என்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தின் மூலம் வெளியேறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் இயங்கும் 8 லட்சத்திற்கு அதிகமாக லேண்ட்லைன் இணைப்புகளையும், ஒரு கோடிக்கும் அதிகமான மொபைல் இணைப்புகளையும் தொடர்பான குறைகளை 4,700 பிஎஸ்என்எல் ஊழியர்கள் தான் கவனித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையால்,உங்கள் பிஎஸ்என்எல் லேண்ட்லைன் இணைப்பில் ஏதேனும் கோளாறு இருந்தால், அதற்கான தீர்வுகளை கொடுக்க பிஎஸ்என்எல் நிறுவனத்தில் போதுமான ஊழியர்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஏன் இத்தனை மக்கள்:
பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களில் சில காலமாகவே ஒழுங்காக ஊதியம் வழங்கப்ப்பட வில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இந்த பொது துறை நிறுவனங்களின் எதிர்காலம் குறித்து ஊழியர்களிடம் இருக்கும் அடிப்படை பயம் கூட இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.