Kanyakumari to Andhra bike journey: ஒவ்வொரு ஆண்டும் செப்.24ஆம் தேதி உலக மோட்டார் சைக்கிள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, கன்னியாகுமரியில் இருந்து ஆந்திரா மாநிலம் நெல்லூர், ஆங்கோர், ஹம்சலா தேவி வரை இந்திய மோட்டார் சைக்கிள் டூர்ஸ் அசோசியேஷன் சார்பில் தேசிய சாதனையை வலியுறுத்தி பைக் பயணம் இன்று தொடங்கியது.
இந்தப் பயணத்திற்கு மோட்டார் சைக்கிள் குழுவின் தலைவர் ஜாக்சன் பெர்னாண்ட்ஸ் மற்றும் வேபாவி ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.
உலக மோட்டார் சைக்கிள் தினமான இன்று 2 பெண்கள், 48 ஆண்கள் அடங்கிய குழுவினர் இந்தப் பயணத்தில் பங்கெடுக்கின்றனர்.
இந்தக் குழுவினர் இன்று காலை கன்னியாகுமரியில் தொடங்கி கடற்கரை வழியாகவே தூத்துக்குடி, ராமேஸ்வரம் வழியாக மோட்டார் சைக்கிளிலில் பயணம் மேற்கொள்கின்றனர்.
இவர்கள், இன்று இரவு புதுவை மாநிலம் சென்று இரவு தங்குகிறார்கள். தொடர்ந்து, நாளை காலை பாண்டிச்சேரியில் இருந்து புறப்பட்டு 1,600 கி.மீ தூரத்தை கடந்து ஹம்சலா தேவி சென்றடைகின்றனர்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“