Advertisment

சென்னையில் தனியார் பேருந்துகள்.. காரணம் இதுதான்.. அமைச்சர் விளக்கம்

மாநகர போக்குவரத்துக் கழகம் தனது வரலாற்றில் முதன்முறையாக, அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அல்லது தொழில்நுட்ப ஊழியர்களை அல்லாமல், தனியார் ஆபரேட்டர்களிடம் டெண்டர் அறிமுகப்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
Mar 06, 2023 13:39 IST
சென்னையில் தனியார் பேருந்துகள்.. காரணம் இதுதான்.. அமைச்சர் விளக்கம்

இந்த வருட இறுதிக்குள், சென்னையில் 500 தனியார் பேருந்துகள் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

publive-image

இது தொடர்பாக, தொழிலாளர் சங்கங்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இருப்பினும், மாநகர போக்குவரத்துக் கழகம் தனது வரலாற்றில் முதன்முறையாக, அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அல்லது தொழில்நுட்ப ஊழியர்களை அல்லாமல், தனியார் ஆபரேட்டர்களிடம் டெண்டர் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதைப்பற்றி அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

"தற்போது விடப்பட்டிருக்கின்ற டெண்டர் என்பது, உலக வங்கி வழங்கியிருக்கின்ற கருத்துரை அடிப்படையில், அதுகுறித்து அதனுடைய சாதக பாதகங்களை ஆராய்வதற்கு ஒரு ஆலோசகர் நியாப்பதற்கான டெண்டர் தான் இது.

இதை தொடர்ந்து, திமுகவின் தொழிற் சங்கமும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது தான் கேலிக்குரிய செய்தியாக இருக்கிறது.

கடந்த அதிமுகவின் ஆட்சியின்போது, 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளனர்.

இந்த அரசாணையில், உலக வங்கி வழங்கியிருக்கின்ற கருத்துரை அடிப்படையில், சென்னையினுடைய உள்கட்டமைப்பு மேம்படுத்தும் குழுவுடன் இணைந்து, 'சென்னை சிட்டி பார்ட்னெர்ஷிப் ப்ரோக்ராம்' கீழ் பல்வேறு கருத்துரைகளை தொகுத்து வழங்கப்பட்டிருக்கிறது.

இதன் அடிப்படையில், தற்போது 500 தனியார் பேருந்துகளை மாநகர போக்குவரத்து கழகத்துடன் செயல்படுத்தலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு, கூடுதலாக 500 பேருந்துகளை இணைக்கும் விதத்தில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே, அதிமுகவின் ஆட்சியின் போது வெளியிடப்பட்ட அரசாணையை, தற்போதைய ஆட்சி நடைமுறைப் படுத்துகிறது.

சென்னை மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில், அரசு போக்குவரத்து நிறுவனத்துடைய பேருந்துகள் முழுவதுமாக இயக்கப்படுகிறது.

மேலும், மற்ற மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. அந்த தனியார் பேருந்துகள் அவரவர்களுக்கு சொந்தமான வழித்தடத்தில், அவரவர்களுடைய சொந்த பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தற்போது, உலக வங்கி வழங்கியிருக்கின்ற இந்த கருத்து என்பது, அரசு வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்குவது என்பது தான். இதனால், போக்குவரத்து கழகம் தனியார் மயமாகிறது என்கிற பேச்சுக்கு இங்கு இடமில்லை", என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Minister Sivasankar #Mtc #Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment