Advertisment

தீ விபத்தில் காயம் அடைந்த 53 வயது குன்றக்குடி கோயில் யானை உயிரிழப்பு

யானை உயிரிழந்த சம்பவம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Karaikudi

54 years old Kundrakudi temple elephant dies

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடியில் அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.

Advertisment

இந்த கோயிலுக்கு கடந்த 1971 ஆம் ஆண்டு ஆத்தங்குடியைச் சேர்ந்த நகரத்தார் சுப்புலட்சுமி என்ற பெண் யானையை பரிசாக கொடுத்தார். கோவில் பராமரிப்பில் வளர்ந்யானை, அருகேயுள்ள தகரக் கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தது

வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அடியில் ஓலை வேயப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கூடாரத்தில் மின்கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென ஓலையில் பரவியது.

தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் யானையை மீட்டு கோவில் மடத்திற்கு கொண்டு வந்தனர்.

Coimbatore

அங்கு கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களால் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் யானை சுப்புலட்சுமி இன்று அதிகாலை 2 மணிக்கு மரணம் அடைந்தது.

தற்போது அந்த யானையின் வயது 53. யானை உயிரிழந்த சம்பவம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment