தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும் 3359 பணியிடங்களுக்கான இரண்டாம் நிலை (Grade-II) காவலர்கள், தீயணைப்புத்துறை மற்றும் சிறைக் காவலர்களுக்கான திறனாய்வு எழுத்து தேர்வு இன்று (10.12.2023)ந் தேதி திருச்சி மாநகரில் பெரியார் ஈ.வே.ரா.கல்லூரி, ஜமால்முகமது கல்லூரி, சமது மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அய்மான் மகளிர் கல்லூரி, நேஷனல் கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, காவேரி மகளிர் கல்லூரி மற்றும் ஸ்ரீமத் ஆண்டவர் கல்லூரி ஆகிய 8 தேர்வு மையங்களில் நடைபெற்றது.
இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் திருச்சி மாநகரில் ஆண்கள் - 4938 மற்றும் பெண்கள் - 1618 என மொத்தம் 6556 நபர்களில் 5496 ( ஆண்கள் 4149, பெண்கள் 1347 ) நபர்கள் இந்த எழுத்து தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
இத்தேர்வு நடைபெற்ற 8 மையங்களில் காவல்துறை அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் என சுமார் 700 பேர் பணியமர்த்தப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டது.
மேற்கண்ட தேர்வின் சிறப்பு மேற்பார்வை அதிகாரியான (Super Check Officer) மாநகர காவல் ஆணையர் ந.காமினி, தேர்வு நடைபெற்ற 8 மையங்களுக்கும் நேரில் சென்று, தேர்வு மையத்தில் பணியர்த்தப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் தேர்வு எழுத வரும் மாணவர்களை உரிய சோதனைக்கு பின் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்பதை உறுதி செய்தனர்.
மேலும், பணியில் இருந்த காவல் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார். மாநகர காவல் ஆணையர் மேற்பார்வையின்போது, தேர்வின் துணைக்குழுதலைவர் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) ரவிசந்திரன் உடனிருந்தார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“