இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 55 பேர் கைது; 6 விசைப்படகுகளும் சிறைப்பிடிப்பு

55 Tamil Nadu fishermen arrested, 6 boats seized by Sri Lankan Navy: நேற்று 43 தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படை; 6 விசைப்படகுகளும் சிறைப்பிடிப்பு; இன்று மேலும் 12 மீன்வர்கள் கைது

தமிழகத்தைச் சேர்ந்த 43 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று டிசம்பர் 18ஆம் தேதி ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் புறப்பட்டு கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 43 பேர் கைது செய்யப்பட்டு 6 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மீனவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் காங்கேசன்துறை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக மீனவர் சங்கத் தலைவர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீனவர்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) மாலையில் கடந்து நெடுந்தீவு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இலங்கை கடற்படை சிறிய இயந்திர படகுகளை விரட்டியடித்தது. இந்த சம்பவம் இரவு 10 மணி முதல் 11 மணி வரை நடந்தது.

ஆறு பெரிய விசைப்படகுகளில் (IND-TN-10-MM-753, IND-TN-10-MM-1033, IND-TN-10-MM-1003, IND-TN-10-MM-2576, IND-TN-10-MM-1037 மற்றும் IND-TN-10-MM-161 என்ற பதிவு எண்களைக் கொண்ட) சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாகக் கரைக்குத் திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் 19 முதல் 54 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இலங்கை கடற்படையின் அறிக்கையின்படி, நெடுந்தீவுக்கு அப்பால் உள்ள கடலில் சனிக்கிழமை இரவு வடக்கு கடற்படை பிரிவுடன் இணைக்கப்பட்ட 4 4 FAF மூலம் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வெளிநாட்டு மீனவர்கள் தங்கள் கடற்பரப்பில் மீன் பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இலங்கையின் மீன்பிடி வளங்களின் நிலைத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தமிழக மீனவர்கள், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு, மீனவர்களை விரைந்து மீட்டு ராமேஸ்வரம் திரும்பச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

ராமேஸ்வரத்தில் நடந்த 11 இயந்திரமயமாக்கப்பட்ட விசைப்படகு சங்கங்களின் கூட்டத்தில், வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 43 மீனவர்களும், படகுகளும் பத்திரமாக ராமேஸ்வரம் வரும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திங்கள்கிழமை ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் மாபெரும் போராட்டம் நடத்தவும் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி, மத்திய அமைச்சர்களிடம் பேசி, மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனிடையே இன்று மேலும் 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரம், மண்டபம் பகுதியில் இருந்து 2 படகுகள் மூலம் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஏற்கனவே 43 மீனவர்களை சிறைப்பிடித்ததுடன், 6 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள நிலையில், தற்போது மீண்டும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 55 tamil nadu fishermen arrested 6 boats seized by sri lankan navy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com