சென்னையில் புதிதாக இயங்கும் தாழ்தள பேருந்துகளின் வழித்தடத்தை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
இதில் முதல்கட்டமாக 17 வழித்தடங்களில் 58 தாழ்தளப் பேருந்துகள் பயணிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு இயக்கப்படும் 70வி வழித்தடத்தில் 7 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்பேடு மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக 104சி வழித்தடத்தில் 6 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
மேலும் புதிய தாழ்தளப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும்போது கூடுதல் வழித்தடங்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த வசதியாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பேருந்துகள் அடுத்தக் கட்டமாக கோவை, மதுரை நகரங்களிலும் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“