சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஸ்ரவந்தி 5-ம் வகுப்பு படித்து வருகிறார். அம்பத்தூர் பட்டறைவாக்கம் சாலையில் இன்று அவர் சென்ற போது கீழே ரொக்கப் பணம் கிடந்துள்ளது. ஆள் யாரும் இன்றி கீழே கிடந்த பணத்தை கண்ட சிறுமி அதனை எடுத்துக்கொண்டு தனது பெற்றோரின் துணையுடன் அம்பத்தூர் காவல் நிலையம் சென்று ஒப்படைத்தார்.
சிறுமி ஒப்படைத்த ரூபாய் 220-ஐ பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் டில்லி பாபு, சிறுமியின் நேர்மையை பாராட்டினார். அதுமட்டுமின்றி சிறுமி ஸ்ரவந்திக்கு teddy bear பொம்மையை பரிசாக வழங்கினார். சிறுவயதிலேயே நேர்மையுடன் சிறுமி நடந்து கொண்ட சம்பவம் காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“