/tamil-ie/media/media_files/uploads/2018/11/deepavli.jpg)
Tamil Nadu news today in tamil,
தீபாவளி பட்டாசு வெடித்ததில் உச்சநீதிமன்றத்தின் கால அவகாச உத்தரவை மீறியதற்காக தமிழகத்தில் மட்டும் 700க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான நடவடிக்கையாக தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, காலை 6 முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் வெடி வெடிக்கலாம் என தமிழக அரசு நேரத்தை நிர்ணயித்து இருந்தது.
தீபாவளி பட்டாசு வெடித்ததற்காக கைது
இந்த நேரத்தில் அல்லாமல் மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பகுதியைச் சேர்ந்த 6 பேர் அனுமதிக்கப்படாத நேரத்தில் வெடி வெடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை மீறி தமிழகத்தில் பட்டாசு வெடித்த 700 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது தமிழக காவல் துறை. சென்னை, கடலூர் பகுதிகளில் தலா 4 பேர் மீதும், கொடைக்கானல் பகுதியில் 2 பேர் மீதும், ராசிபுரம் பகுதியில் ஒருவர் மீதும், கோவையில் 48 நபர்கள் மீதும், திருப்பூர் பகுதியில் 57 நபர்கள் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. அதிகபட்சமாக விருதுநகர் பகுதியில் 80 நபர்கள் மீதும், விழுப்புரம் பகுதியில் 135 நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். மேலும் பலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.