சேலம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் குளித்த 6 பேரை வெள்ளம் அடித்துச் சென்ற நிலையில், தீயணைப்புத்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர். இதில் 5 பேர் மாணவிகள் என்பது தெரிய வந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. இதனால், ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், ரெட்டியூர் என்ற பகுதியில் இன்று ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த 5 மாணவிகள் உட்பட 6 பேரை தண்ணீர் அடித்துச் சென்றது. அவர்களின் கதி கேள்விக்குறியாகியுள்ள நிலையில், 6 பேரையும் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடி வருகின்றனர். தீவிர தேடுதலுக்கு பிறகு ஆற்றில் மூழ்கிய வாணி ஸ்ரீ, மைதிலி ஆகிய இரு மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சேலம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ளதால், சுற்றுலா வரும் பயணிகள் காவிரி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ என கூடாது சேலம் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல், காவிரி கரையோரங்களில் நின்றுக் கொண்டு, செல்ஃபி உட்பட புகைப்படங்கள் எடுக்கக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
More details awaited...