scorecardresearch

மின்வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு; பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை

பேச்சுவார்த்தையின் இறுதியில் மின்சார ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற முடிவு எட்டப்பட்டது.

6 percent pay hike announced for Tamil Nadu electricity employees
மின்வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு வழங்கி பேச்சுவார்த்தையில் உடன்பபாடு எட்டப்பட்டது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் 19 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார்.

தொடர்ந்து, இந்தப் பேச்சுவார்த்தையின் இறுதியில் மின்சார ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற முடிவு எட்டப்பட்டது. இந்த ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.527 கோடி கூடுதல் செலவாகும் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 56 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும், முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பதவிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

தொடர்ந்து, நிரந்தரத் தன்மை வாய்ந்த பதவிகளை அவுட்சோர்சிங் முறையில்வெளியாள்களைத் தேர்வு செய்யக் கூடாது என்ற கோரிக்கையையும் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: 6 percent pay hike announced for tamil nadu electricity employees

Best of Express