பார்வை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகள், ஆரிசியர் பணியிடங்களில் 1 % இட ஒதுக்கீடு கேட்டு தொடர் போராட்டத்தில் ஈட்டுபட்டனர். இந்நிலையில் அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டெர்லிங் சாலையில் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகள் கடந்த 6 நாட்களாக போராடி வந்தனர். ஆசிரியர் பணியில் 1 % இட ஒதுக்கீடு கேட்டு போராடி வந்தனர்.
இந்த போராட்டத்தால் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் அரசு வழங்கும் பொருளாதார உதவியை அதிகரிக்க கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 30 மேற்பட்ட பார்வை குறைபாடு மாற்றுத் திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் சைதாபேட்டையில் உள்ள கல்யாண மண்டபதில் தடுத்து வைக்கப்பட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“