5 ஆண்டில் ரூ.61 கோடி... தமிழகத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்ட 100 நாள் வேலைத்திட்ட நிதி

சமூக தணிக்கை செயல்முறையானது வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதையும், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும் உத்தரவாத வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பொதுப் பொறுப்புணர்வை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சமூக தணிக்கை செயல்முறையானது வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதையும், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும் உத்தரவாத வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பொதுப் பொறுப்புணர்வை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

author-image
WebDesk
New Update
100 days work

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGA) கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ. 900 கோடி நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக சமூக தணிக்கை அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் பெரும் அளவில் நிதி கையாடல் நடந்துள்ளதை இந்த அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

Advertisment

2020-2021 முதல் 2024-2025 வரையிலான காலகட்டத்தில், 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 6,15,840 நிதி முறைகேடு வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 889.19 கோடி ஆகும். இந்த கையாடல் செய்யப்பட்ட நிதியில் இருந்து இதுவரை ரூ. 110.87 கோடி மட்டுமே அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இக்காலகட்டத்தில் ரூ. 60.79 கோடி நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ. 24.43 கோடி மீட்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் செலவழிக்கப்படும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு வெளிப்படைத்தன்மையையும் பொதுப் பொறுப்புடைமையையும் உறுதி செய்வதே சமூக தணிக்கையின் முக்கிய நோக்கம்.

சமூக தணிக்கை, அந்தந்த மாநிலங்களின் சமூக தணிக்கைப் பிரிவுகளால் நடத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்த தணிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

Advertisment
Advertisements

கடந்த நான்கு ஆண்டுகளில் சமூக தணிக்கை செய்யப்படும் பஞ்சாயத்துகளின் சதவீதம் படிப்படியாக அதிகரித்துள்ளது. 2020-2021 நிதியாண்டில், நாட்டின் மொத்த 2,70,378 பஞ்சாயத்துகளில் 14.7% (38,032 பஞ்சாயத்துகள்) மட்டுமே தணிக்கை செய்யப்பட்டன.

கேரளாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக அனைத்து 941 பஞ்சாயத்துகளிலும் சமூக தணிக்கை நடத்தப்பட்டுள்ளது ஒரு முன்மாதிரியாகும். பிற தென் மாநிலங்களிலும் 95% க்கும் அதிகமான பஞ்சாயத்துகளில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் தணிக்கை செயல்பாடு குறைவாகவே உள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள 28,292 பஞ்சாயத்துகளில் கால் பகுதிக்கும் குறைவான பஞ்சாயத்துகளிலேயே தணிக்கை நடத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் (2024-25) ஆண்டில் 6,665 பஞ்சாயத்துகளில் நடத்தப்பட்ட தணிக்கையில், ரூ. 7.11 கோடி மதிப்பிலான 5,176 முறைகேடு வழக்குகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இதில் ரூ. 16.31 லட்சம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது (2.29%).

முந்தைய ஆண்டில், 7,795 பஞ்சாயத்துகளில் நடத்தப்பட்ட தணிக்கையில் ரூ. 4.99 கோடி முறைகேடு (353 வழக்குகள்) கண்டறியப்பட்டது. இதில் ரூ. 19.40 லட்சம் மட்டுமே மீட்கப்பட்டது.

சமூக தணிக்கை நடத்துவதற்கு மத்திய அரசு தனியாக நிதி ஒதுக்கிய போதிலும், பல மாநிலங்கள் இதை புறக்கணிப்பதாக ஒரு மூத்த அதிகாரி டிடிநெக்ஸ்ட் பக்கத்திற்கு தெரிவித்துள்ளார். இந்த அலட்சியம், ஏழைகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டத்தை பலவீனப்படுத்துகிறது.

MGNREGS

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: