வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள் : தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் துறந்த விடுதலைப் புலிகள் மற்றும் மாணவர் இயக்கத்தை சேர்ந்தவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் மாவீரர் நாள் அனுசரிப்பது வழக்கம்.
தமிழ் ஈழ விடுதலைக்கு போராடிய விடுதலைப் புலிகளால் 1989ம் ஆண்டு முதல் இந்நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஈழப் போரில் உயிரிழந்த மாவீரர்களின் தியாகத்தை நினைவு கூறுவதை தங்களின் அடிப்படை உரிமைகளாக பாவித்து வருகிறார்கள் ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள். ஒவ்வொரு வருடமும் புலம் பெயர் தமிழர்களால் இந்நாள் அனுசரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள் இன்று
தமிழ் ஈழ விடுதலைக்கு போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் இன்று. இலங்கையில் இருக்கும் வால்வெட்டித் துறையில் நவம்பர் 26ம் தேதி, 1954ம் ஆண்டு பிறந்தார். இன்று அவருடைய 64வது பிறந்தநாள்.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் பங்கேற்று மே 17ம் தேதி உயிரிழந்தார்.
வால்வெட்டித் துறையில் இருக்கும் அவருடைய இல்லத்தின் முன்பு கேக் வெட்டி கொண்டாட முற்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை காவல் துறை கைது செய்தது. ஆனால் வடகிழக்கு மாகாணம் முழுவதும் பிரபாகரனின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள் தமிழர்கள்.
ட்விட்டர் தளத்தில் #Prabhakaran64 என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டாகி வருகிறது.
நடிகர் சிபி ராஜ், இசையமைப்பாளர் டி.இமான் போன்றோர் பிரபாகரனின் பிறந்தநாளை நினைவு கூறும் விதமாக தங்களின் சமூக வலை தளங்களில் கருத்து பதிவு செய்தனர்.
சமீபத்தில் யாழ்பாணம் பயணித்த நடிகர் சதீஸ், பிரபாகரனின் இல்லத்திற்கு முன்பு நின்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
மதிமுக அலுவலகத்தில் கேக் வெட்டி இன்று வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தமிழர்கள் பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள்.