பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற புகாரை அடுத்து உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு அறிவுறுத்தலின்படி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு ஆய்வு திருச்சியில் ஆய்வு செய்தனர்.
உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு, காமராஜர் ரோடு மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் நாராயணபெருமாள் என்பவர் நடத்தி வரும் மளிகை கடையில் ஆய்வு செய்தனர்.
மேற்கண்ட ஆய்வின்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 65 கிலோ இருப்பது கண்டறிந்து பறிமுதல் செய்யபட்டது. மேலும் வழக்கு பதிவதற்காக மூன்று சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டன.
மேலும், பறிமுதல் செய்யபட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும், சுடலைமனி என்பவரையும் மேல் நடவடிக்கைக்காக திருச்சிராப்பள்ளி மாநகரம் பொன்மலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்களாகிய கந்தவேல், இப்ராஹிம், மகாதேவன் ஆகியோரும் உடனிருந்தனர்.
மேலும், உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு கூறுகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களோ அல்லது கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களோ அல்லது சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்டு விற்பனை செய்வது தெரிய வருமாயின் கீழ்கண்ட தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரியப்படுத்த வேண்டும் என்றும், தகவல் அளிப்போரின் தகவல் ரகசியம் காக்கப்படும் என்றும் கூறினார்.
மாவட்ட புகார் எண்கள் விபரம்; 9626839595, மாநில புகார் எண் 9444042322.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“