Advertisment

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் 7.5% இட ஒதுக்கீடு

அரசாங்க பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கையில் ஆர்வலர்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

author-image
WebDesk
New Update
3 புதிய தனியார் கல்லூரிகள்: தமிழகத்தில் எம்பிபிஎஸ் சீட்களின் எண்ணிக்கை 8000-ஆக உயர்வு

தமிழக மருத்துவ மாணவர்கள்

நீட் தேர்வை க்ளியர் செய்யும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதில் 7.5 சதவீத “கிடைமட்ட இடஒதுக்கீடு” வழங்கும் மசோதாவை, தமிழக சட்டமன்றம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றியது.

Advertisment

உடல் சூட்டை தணிக்க, முடி வளர… ஹெல்தி & டேஸ்டியான வெந்தய குழம்பு!

நீட் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கடந்த சில ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவது பெருமளவில் சரிந்ததை அடுத்து இந்த இடஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7.5 சதவீத இடஒதுக்கீடு, ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 300 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதை உறுதி செய்யும்.

எவ்வாறாயினும், இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, நீட் தேர்வு நடத்துவதை அரசாங்கம் இன்னும் எதிர்க்கிறது என்றும் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழகம் தகுதியானது என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

"அரசு பள்ளி மாணவர்களின் நலன்களுக்காக, மருத்துவ மற்றும் பல் மருத்துவ  கல்லூரிகளில் சேர்வதில் கிடைமட்ட இட ஒதுக்கீடு பெற அவர்கள் தகுதி பெறுவார்கள் என்று நான் மார்ச் 21, 2020 அன்று சட்டமன்றத்தில் தெரிவித்தேன். இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் ஒரு குழுவையும் அமைத்தேன். இதற்காக ஒரு சட்டத்தை குழு பரிந்துரைத்தது, இது மாநில அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது" என்று முதல்வர் பழனிசாமி சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அரசாங்க பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கையில் ஆர்வலர்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், "எதும் இல்லாமல் இருப்பதற்கு, ஏதோ ஒன்று இருப்பதே சிறந்தது" என்று அவர்கள் கூறுகிறார்கள்.

“இந்த இட ஒதுக்கீடு நீட்டில் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே உதவும். ஆனால் இங்குள்ள சிக்கல் என்னவென்றால், நீட் குறித்த பயம் பல மருத்துவ ஆர்வலர்கள் தங்கள் கனவுகளை துறந்து, வேறு ஏதேனும் ஒரு பாடத்தை எடுக்கும் நிலைக்கு தள்ளுகிறது. NEET-ஐ அகற்றுவதற்கான வழிகளை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும், இது காலத்தின் தேவையாகும்.” என செயற்பாட்டாளரும், பொது பள்ளி முறைமைக்கான (SPCSS - தமிழ்நாடு) மாநில பொதுச் செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்கள் 510 பேர் ஜே.இ.இ தேர்ச்சி: டெல்லி சாதனை

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தான், மாநிலத்தில் உள்ள மருத்துவ ஆர்வலர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு “நிரந்தர தீர்வு” என்றும் அவர் கூறினார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment