கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1000 நிதி உதவி அளிக்கக் கோரி மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியான மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை (நவ.10) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இந்த விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. அப்போது பேசிய மு.க. ஸ்டாலின், “மருத்துவரின் அறிவுரையை மீறி இங்கு வந்துள்ளேன்” என்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், “என்னால் மக்களை பார்க்காமல் இருக்க முடியவில்லை. காய்ச்சல் சரியாகிவிட்டாலும், தொண்டை வலி இன்னமும் சரியாகவில்லை. தொண்டை வலியை விட தொண்டில் தொய்வில் ஏற்படக்கூடாதென இங்கு வந்துவிட்டேன்” என்றார்.
மேலும், முதலில் இந்தத் திட்டத்தை திமுக அறிவித்தபோது இது நடக்காது என்றார்கள். இதை செயல்படுத்த முடியாது என்றார்கள். ஆனால தற்போது நாங்கள் செயல்படுத்தி உள்ளோம்.
தமிழ்நாட்டில் தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் எந்தப் புகாருக்கும் இடம் இல்லை.
இந்தத் திட்டத்தில் பாரபட்சமின்றி தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுவருகிறது. இந்த மிகப்பெரிய சாதனையை அமைதியாக செய்துகாட்டியுள்ளோம்” என்றார்.
மேலும், “செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் காஞ்சிபுரத்தில் இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்தேன். தற்போது செப்டம்பர் 15 மற்றும் அக்டோபர் 15 என இரண்டு மாதங்கள் ரூ.2000 பணத்தை ஒரு கோடியே 6 லட்சம் பயனாளிகள் பெற்றுவிட்டனர்” என்றார்.
நேற்று, 7 இலட்சத்து 35 ஆயிரம் மகளிர்க்கு இன்று புதிதாய் உரிமைத் தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“