Advertisment

கடலூரில் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

கடலூரில் ஆற்றுத் தடுப்பணையில் குளிக்கச் சென்ற 4 சிறுமிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு; அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
Tamil News: ஜூன் 1,2ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

7 people died due to drowned into river in cuddalore CM announced financial assistance: கடலூரில் கெடிலம் ஆற்றுத் தடுப்பணையில் குளிக்க சென்ற 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

Advertisment

கடலூர் மாவட்டம் ஏ.குச்சிபாளையம் பகுதியில், இன்று காலை அதே பகுதியை சேர்ந்த பெண் பிரியா, மாணவிகள் மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷினி, நவநீதம் ஆகியோர் அருகிலுள்ள கெடிலம் ஆற்றுத் தடுப்பணையில் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் ஆழமான பகுதியில் இறங்கியதால், தண்ணீரில் மூழ்கினர். உடனடியாக சத்தம்கேட்டு திரண்ட கிராம மக்கள், உடனடியாக ஆற்றில் மூழ்கிய 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், சிறுமிகள் உட்பட 7 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆற்று தடுப்பணையில் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மண்ணின் தன்மை, குறிப்பிட்ட இடத்தில் பள்ளம் ஏற்பட்டது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

இந்நிலையில் கடலூர் அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் இன்று 12.45 மணிக்கு குளிக்கச் சென்ற சங்கவி (வயது 18) த/பெ. சங்கர், பிரியா (வயது 19) த/பெ.குணாளன், மோனிஷா (வயது) 16) த/பெ. அமர்நாத், நவநீதம் (வயது 20) த/பெ. மோகன், சுமிதா (வயது 18), த/பெ. முத்துராமன், காவியா (எ) திவ்யதர்ஷிணி (வயது 10), த/பெ. ராஜ்குரு, மற்றும் பிரியதர்ஷிணி (வயது 15), த/பெ. ராஜ்குரு ஆகிய 7 பேர் குளிக்கும் இடத்தில் அதிக அளவில் பள்ளம் இருந்ததால், அந்தப் பள்ளப் பகுதியில் உள்ள ஆற்று மணலில் சிக்கி எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: சென்னையில், பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கை ஹேக் செய்த கேரள இளைஞர்; சதி வேலையா? என போலீசார் விசாரணை

உயிரிழந்தோரில் ஐந்து பேர் குச்சிப்பாளையம் கிராமத்தையும், இருவர் அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த துயர சம்பவத்தைக் கேள்வியுற்று, மிகவும் வேதனை அடைந்தேன். உயிரழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்விபத்தில் உயிரிழந்த ஏழுபேரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தலா ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Stalin Cuddalore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment