திமுக செயற்குழு கூட்டத்தில் 7 முக்கிய தீர்மானங்கள் : அனைத்து கட்சிகளுடன் இணைந்து செயல்பட முடிவு

மத்திய அரசின் அறிவிப்பிற்காக காத்திருந்த அரசியல் தலைவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சென்னையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில்  7 முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக் கெடு நேற்றுடன்(29.3.18) முடிவடைந்தது. ஆனால் மத்திய அரசு அது தொடர்பாக எந்த அறிவிப்பையும் தற்போது வரை வெளியிடவில்லை.  நேற்று இரவு வரை, மத்திய அரசின்  அறிவிப்பிற்காக காத்திருந்த அரசியல் தலைவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த பரபரப்பான சூழலில் திமுக செயற்குழு கூட்டம் இன்று(30.3.18) காலை  சென்னையில் நடைப்பெற்றது.  திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்ற இந்த கூட்டத்தில் திமுக கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இந்த கூட்டம் நடந்து முடிந்தது.

இந்த கூட்டத்தில்,  7 முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  திமுக சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 7 தீர்மானங்களின் விபரங்கள்.

1.  காவிரி மேலாண்மை  வாரியம் அமைக்காமல் ஏமாற்றிய மத்திய அரசைக் கண்டித்து  தீர்மானம் நிறைவேற்றம்.

2. காவிரி வாரிய விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து திமுக  போராட்டம்

3.  நேர்மையற்ற முறையில் நடைப்பெறும் கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானம்

4. நியூட்ரினா திட்டத்திற்கு அனுமதி வழங்குவதை எதிர்த்தி தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீர்மானம்.

5. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த என்ற தீர்மானம்.

6. ஈரோட்டில் நடைபெற்ற திமுக மண்டல மாநாடு வெற்றி பெற்றதற்கான பாராட்டு தீர்மானம்.

7.மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27% இட ஒதுக்கீட்டை புறக்கணிப்பதற்கு கண்டன தீர்மானம்

 

 

 

 

 

×Close
×Close