தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர் கடந்த 6-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த மசோதாவை ஸ்டாலின் தாக்கல் செய்தார். இது பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து இன்று சட்டப்பேரவையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஸ்டாலின், "பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கை விசாரிக்க மதுரை, திருநெல்வேலி, கோவை, சேலம், திருச்சி, சென்னை சுற்றுப்புற பகுதியில் 7 தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும். அதே போல, மாவட்டம் தோறும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும்.
பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கைதிகளுக்கு முன் விடுதலை கிடைக்காத வகையில், தமிழ்நாடு சிறைத்துறை விதிகள் திருத்தம் செய்யப்படும்" என்றார்.