கடந்த 6ஆம் தேதி கோவை பீளமேடு பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த மாணவரை, அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் மொட்டை அடித்து ராக்கிங் செய்தனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர் கொடுத்த புகாரில் அதே கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் சந்தோஷ், யாலிஷ், தரணிதரன், ஐயப்பன், நித்தியானந்தன், மணி, தில்பர் மற்றும் வெங்கடேஷ் ஆகிய 8 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
/indian-express-tamil/media/post_attachments/81742e45-981.jpg)
வெங்கடேஷ் தவிர மற்ற ஏழு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் 7 பேரும் பிணை கேட்டு கோவை 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் 7 மாணவர்களுக்கும் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 7 மாணவர்களும் அவரவர் ஊர்களில் உள்ள காவல் நிலையத்தில் 30 நாட்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/2b44be5f-d5c.jpg)
தலைமுறைவாக உள்ள மாணவர் வெங்கடேஷை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“