எங்க ஊருக்கு பக்கத்துலயே டாஸ்மாக் மதுபானக் கடை வேண்டும் எனக் கோரி தருமபுரி மாவட்டத்தில் 7 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது. மது பிரியர்கள், மது வாங்க டாஸ்மாக் கடைக்கு 20 கி.மீ தூரம் செல்ல வேண்டி இருப்பதால் தங்கள் பகுதியிலேயே டாஸ்மாக் கடை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் குடியிருப்பு பகுதிகள், கோயில்கள், பள்ளிக்கூடங்கள் அருகே இருகும் டாஸ்மாக் கடைகளை டாஸ்மாக் மதுக் கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தியதை ஊடகங்களில் செய்தியில் பார்த்திருக்கிறோம். அதே போல, எங்கள் ஊரில் டாஸ்மாக் கடை வேண்டாம் என போராட்டம் நடத்திய மக்களையும் பார்த்திருக்கிறோம். டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி நடத்திய போராட்டம், டாஸ்மாக் கடையையே அடித்து நொறுக்கப்பட்ட செய்திகளை எல்லாம் பார்த்திருக்கிறோம். ஆனால், வித்தியாசமாக, தருமபுரி மாவட்டத்தில் 7 கிராம மக்கள் மது வாங்க டாஸ்மாக் கடைக்கு 20 கி.மீ தூரம் செல்ல வேண்டி இருப்பதால் தங்கள் பகுதியிலேயே டாஸ்மாக் கடை வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
அதிலும், தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாப்பிரெட்டிபட்டி பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தி டாஸ்மாக் மதுபானக் மூட வைத்தனர். அப்படியான தருமபுரி மாவட்டத்தில்தான், எங்கள் ஊருக்கு பக்கத்துலயே டாஸ்மாக் மதுபானக் கடை வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள அஞ்சே அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட நலப்பரம்பட்டி, கெட்டூர், ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அருகில் மதுபான கடை இல்லாததால் 20 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளனர். ஊருக்கு அருகிலேயே டாஸ்மாக் மதுபானக் கடை இல்லாததால், உள்ளூரில் மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு பிளாக்கில் விற்கிறார்கள், விவசாய வேலை செய்துவிட்டு உடல் வலியுடன் வரும் மக்களுக்கு மதுபானம் வேண்டும் என்றும், அதற்கு ஊருக்கு பக்கத்திலேயே டாஸ்மாக் கடை வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஆதனூரில் முன்பு இருந்த டாஸ்மாக் மதுபானக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தங்கள் ஊருக்கு அருகிலேயே டாஸ்மாக் கடை இல்லாததால், சட்டவிரோதமாக பிளாக்கில் விற்கப்படும் மதுபானத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதால், உழைத்து சம்பாதித்த பணம் அதிகம் செலவாகிறது, அதனால், கள்ளச்சாராயம் உள்ளிட்ட பிற போதையை மக்கள் நாடாத வகையில் தங்கள் பகுதியிலேயே டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க வேண்டும் என 7 கிராம மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
எங்கள் ஊரில் டாஸ்மாக் மதுபானக் கடையை மூடுங்கள் என போராட்டம் நடத்தும் மக்களைப் பார்த்திருக்கிறோம், ஆனால், எங்க ஊருக்கு டாஸ்மாக் கடை வேண்டும் எனக் கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் குடும்பம் குடும்பமாக சென்று மனு அளித்த கிராமத்தினரை யாருப்பா நீங்கள் என்று நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.