Advertisment

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பெண்கள் பரிதாப பலி; 4 பேர் படுகாயம்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலையில் திடீரென பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளானதில் 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
fireworks factory explosion, 7 women killed in explosion, cuddalore fireworks factory,பட்டாசு ஆலை வெடி விபத்து, 7 பெண்கள் பலி, கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், குறுங்குடி, பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் பலி, kattumannarkovil kurungudi fireworks factory, 7 women killed in explosion in cuddalore, tamil nadu, 4 women injuries

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலையில் திடீரென பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளானதில் 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Advertisment

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தொழிற்சாலை, நிறுவனங்கள் செயல்படுவதற்கு பல்வேறு கட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி முதல்வர் பழனிசாமி, புதிய தளர்வுகளுடன் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். அதில், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் 100 பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குறுங்குடி கிராமத்தில் சின்னதுரை என்பவரின் மனைவி காந்திமதிக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் வில்வர் ஃபயர் ஒர்க்ஸ் தொழிற்சாலை செயல்பட்டு வந்துள்ளது. இந்த தொழிற்சாலையில், இன்று (செப்டம்பர் 4) பெண்கள் பணிக்கு பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 11 மணி அளவில் திடீரென பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர் காந்திமதி, அதே பகுதியைச் சேர்ந்த ராசாத்தி, லதா, மலர்க்கொடி, சித்ரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த வெடிவிபத்தில் படுகாயம் அடைந்த ரத்னாம்பாள், தேன்மொழி, அனிதா ருக்குமணி ஆகிய 4 பேர் மீட்கப்பட்டு காட்டுமன்னார்கோவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் மேலும் 2 பெண்கள் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதனால், பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்ததில் பட்டாசு தயாரிக்கும் ஆலை கட்டிடம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது.

பட்டாசு ஆலையில் நடந்த இந்த பயங்கர வெடி விபத்து குறித்து, கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபினவ், சிதம்பரம் உதவி ஆட்சியர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.

விபத்துக்குள்ளான பட்டாசு தொழிற்சாலை கட்டிடம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகியுள்ளதால், பட்டாசு ஆலையில் அனுமதிக்கப்பட்ட பட்டாசுகள் மட்டும்தான் தயாரிக்கப்பட்டதா அல்லது, நாட்டு வெடிகுண்டுகள் ஏதேனும் தயாரிக்கப்பட்டதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, கடலூர் மாவட்டம் குறுங்குடி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Cuddalore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment