தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மீது 70 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கு!

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, அதிகார துஷ்பிரயோகம் செய்து தன் நிலத்தை அபகரிக்க முயல்வதாக 70 வயது மூதாட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மீது 70 வயது மூதாட்டி புகார் மனு : கிருஷ்ணகிரி மாவட்டம் கெம்பசந்திரம் கிராமத்தில் 70 வயது மூதாட்டி அஞ்சனா ரெட்டிக்கு சொந்தமான 32.87 ஏக்கர் விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அபகரிக்க முயல்வதாக நிலத்தின் உரிமையாளரான […]

balakrishna reddy, அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி
balakrishna reddy, அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, அதிகார துஷ்பிரயோகம் செய்து தன் நிலத்தை அபகரிக்க முயல்வதாக 70 வயது மூதாட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மீது 70 வயது மூதாட்டி புகார் மனு :

கிருஷ்ணகிரி மாவட்டம் கெம்பசந்திரம் கிராமத்தில் 70 வயது மூதாட்டி அஞ்சனா ரெட்டிக்கு சொந்தமான 32.87 ஏக்கர் விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அபகரிக்க முயல்வதாக நிலத்தின் உரிமையாளரான 70 வயது மூதாட்டி அஞ்சனா ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், அமைச்சர் பாலகிருஷ்ணா, போலி ஆவணங்கள் மூலம் தன் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாகவும், இந்த நில விவகாரம் தொடர்பாக ஓசூர் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், பாலகிருஷ்ணா ரெட்டி தன் அதிகாரத்தை பயன்படுத்தி மாவட்ட வருவாய் அதிகாரி மூலம் அவர் உறவினர் பெயருக்கு நிலத்தின் பட்டாவை மாற்றியுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இந்த நிலத்தை வேறு பெயரில் பட்டா பதிய தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், இந்த விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 70 year old woman file case in highcourt against minister balakrishna reddy

Next Story
கடவுள் மனிதர்களை சமமாக படைத்தார் என நம்பும் பக்தர்களுக்கு இது மகிழ்வைத் தரும் : கனிமொழிkanimozhi, கனிமொழி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com