scorecardresearch

மத்திய அரசு ஒதுக்கிய ரூ.74 கோடி: தமிழக போலீஸ் பயன்படுத்தாமல் விட்டது அம்பலம்

மத்திய அரசு வழங்கிய ரூ.74.03 கோடி பயன்படுத்தப்படாமல் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

police

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி., (இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்) அறிக்கையில், “தமிழக காவல் துறையை நவீனமயமாக்கும் திட்டங்களைச் செயல்படுத்தாமல் காலதாமதம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.14.37 கோடி அளவுக்கு வீண் செலவு செய்யப்பட்டுள்ளது”, என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மத்திய அரசு வழங்கிய ரூ.74.03 கோடி பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 60 சதவீதமும், மாநிலத்தின் 40 சதவீத நிதியுதவியுடன் காவல் துறையை நவீனமயமாக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2015 இல், இரண்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. பொதுப் பாதுகாப்புச் சங்கம் (APCO) செயல்படுத்துதல் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறைகளை நவீனமயமாக்குதல் மற்றும் சென்னையில் சிசிடிவி நிறுவுதல் ஆகியவை ஆகும்.

ஸ்பெக்ட்ரம் கட்டணம், சிசிடிவி கட்டுப்பாட்டு அறைக்கான உபகரணங்கள், 14.37 கோடி ரூபாய் செலவில் 2015ல் வாங்கப்பட்டன. கவரேஜ் தொடர்பான சிக்கலைத் தீர்க்க முடியவில்லை என்று ஒப்பந்ததாரர் கூறினார். இதற்கிடையில், ஒப்பந்ததாரரிடம் டெண்டர் விதிமுறைகளை மீறி காவல் துறை ஸ்பெக்ட்ரம் கட்டணமாக ரூ.7.18 கோடி செலுத்தியது. விதிமுறைகளின்படி ஒப்பந்ததாரர் தொகையை செலுத்தியிருக்க வேண்டும்.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு (2022 இறுதிக்குள் தணிக்கை செய்யப்பட்டது), காவல் துறையில் தகவல் தொடர்பு வலையமைப்பை மேம்படுத்தும் நோக்கம் இன்னும் எட்டப்படவில்லை. இதனால் சென்னை மற்றும் திருச்சிக்கான திட்டப்பணிகளும் பாதிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசின் நிதியான ரூ.74.03 கோடி பயன்படுத்தப்படவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: 74 crores of central government funds for police department modernisation unutilized