ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, நாட்டில் கடந்த சில நாள்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பரவிய ஒமிக்ரான் கொரோனாவை கட்டுப்படுத்த, மாநில அரசுகள் கட்டுப்பாடை கடுமையாக்கியுள்ளனர்.
அந்த வகையில், பல மாதங்களாக சரிவை சந்தித்த கொரோனா தினசரி எண்ணிக்கை, ஒமிக்ரானால் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. நேற்று மட்டும் 1155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, கொரோனாவிற்கு 7,470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதிகபட்சமாக நேற்று சென்னையில் 589 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது
இதற்கிடையில், ஏற்கனவே 46 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியான நிலையில், மேலும் 74 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மாநிலத்தின் ஒமிக்ரான் மொத்த பாதிப்பு 120 ஆக உயர்ந்துள்ளது. ஒமிக்ரான் பாதிப்புக்குளான மாநிலங்கள் பட்டியலில், தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.இது, டெல்டாவை போல் ஒமிக்ரான் பரவ தொடங்கியுள்ளதா என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஒமிக்ரான் பாதிப்புக்குள்ளான 66 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தை தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஜனவரி 10 ஆம் தேதி வரை, ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil