/tamil-ie/media/media_files/uploads/2021/07/college-online-application.jpg)
75.31 lakh people register in employment office and wait for govt jobs: தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 75 லட்சத்து 31 ஆயிரத்து 122 பேர் காத்திருப்பதாக மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த டிசம்பர் 31-ம் தேதிவரை, மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக 75 லட்சத்து 31 ஆயிரத்து 122 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பதிவு செய்துள்ளவர்களில் ஆண்கள் 35 லட்சத்து 35 ஆயிரத்து 992 பேர். பெண்கள் 39 லட்சத்து 94 ஆயிரத்து 898 பேர் பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 232 பேர்.
பதிவு செய்துள்ளவர்களில் வயது வாரியான விவரங்களை பொறுத்தவரை, 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18 லட்சத்து 25 ஆயிரத்து 668 பேர். 19 முதல் 23 வயது வரையுள்ள பல்வேறு தரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 15 லட்சத்து 50 ஆயிரத்து 245 பேர். 24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 28 லட்சத்து 30 ஆயிரத்து 275 பேர். 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 13 லட்சத்து 13 ஆயிரத்து 652 பேர். 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 11 ஆயிரத்து 282 பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல், பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 39 ஆயிரத்து 414 பேர் என்று வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.