/tamil-ie/media/media_files/uploads/2023/04/kodaikanal.jpg)
மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடுகள் உள்ளிட்டவற்றை இலவசமாக பார்வையிடலாம்.
மதுரை- திண்டுக்கல் இடையே கொடை ரோட்டை கடக்கும் போது, சில்லென்ற வாடைக்காற்று நம்மை தீண்டுவதை நம்மில் பலர் அனுபவித்திருப்போம்.
இந்த வழியாக ரயில் பயணங்களிலோ, பேருந்து பயணங்களிலோ, வேறு ஏதேனும் வாகனங்களிலோ செல்லும் போதும் நாம் இதனை உணரந்திருப்போம்.
மேலும், பலரும் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது கொடைக்கானலுக்கு செல்ல வேண்டும் என நினைத்திருப்பார்கள். கொடைக்கானல் இயற்கையின் கொடை. இங்கு சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்க பல்வேறு இடங்கள் உள்ளன.
இந்த இடங்களில் எல்லாம் சுற்றிப் பார்க்க, ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விதமாக கட்டணங்கள் வசூலிக்கப்படும். இந்த இடங்களை, ஜனவரி 26 ஆம் தேதியான இன்று இலவசமாக சுற்றிப் பார்க்கலாம்.
நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, " மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடுகள் உள்ளிட்டவற்றை இலவசமாக பார்வையிடலாம்" என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.