scorecardresearch

பைக்கில் கட்டட கம்பி திருட்டு.. இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்.. 7 என்ஜினீயர்கள் உள்பட 8 பேர் கைது

சைதாப்பேட்டையில் இரும்பு திருடியதாக தாக்குதலுக்கு ஆளான இளைஞர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

A teacher was sentenced to one month in jail in a cheque fraud case
கைதி தப்பி ஓட்டம்

சென்னை அருகேயுள்ள சைதாப்பேட்டை வெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் 23 வயதான சாகின்ஷா காதர். இவர், தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதான ஹேமநாதன் மற்றும் 16 வயதான சிறுவன் ஒருவருடன் தாடண்டர் நகர் மைதானம் அருகே புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டடத்தில் சம்பத்தன்று மாலை இரும்பு திருட சென்றுள்ளார்.

இதை அங்குள்ள வடமாநில தொழிலாளர் ஒருவர் பார்த்து கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் கும்பலாக தாக்கியதில் இருசக்கரவாகனத்தை ஓட்டிய 16 வயதுசிறுவன், திருடப்பட்ட இரும்புபலகையை பின்னாலிருந்து பிடித்திருந்த சாகின்ஷா காதர் ஆகிய இருவரும் பலத்த காயமுற்றனர்.
வாகனத்தில் நடுவில் அமர்ந்திருந்த ஹேமநாதன் தப்பி ஓடிவிட்டார்.

இதில் பலத்த காயமுற்ற சாகின்ஷா காதர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 16 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இரும்பு திருட வந்த இளைஞர்களை தாக்கியதாக கட்டடப் பொறியாளர்கள் 7 பேர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

அவர்களில் சக்திவேல், ஜெயராம், மனோஜ், உமா மகேஷ்வரன், அஜித், நம்பிராஜ் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கட்டட பொறியாளர்கள் ஆவார்கள். மற்றொருவர் தொழிலாளியான சிவபிரகாசம் ஆவார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: 8 arrested in case of youth who stole building wire beaten to death in chennai