தீபாவளி பண்டிகை இன்று (நவ.12) கொண்டாடப்படும் நிலையில் சென்னையிலிருந்து பல லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கடந்த 4 தினங்களாக ஆய்வு நடத்தினார்கள்.
தொடர்ந்து, இதுவரை 6,699 பேருந்துகள் போக்குவரத்துத்துறையால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில், 1,223 பேருந்துகளில் பல்வேறு விதிமீறல்கள் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டன.
இந்த நிலையில், 8 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விதிமீறல்களில் ஈடுபட்ட பேருந்துகளிடம் ₨18.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, ₨10.70 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம், “கடந்த 3 நாள்களில் 4.70 லட்சம் பேர் இதுவரை சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்” என்றார்.
மேலும், “கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 30 ஆயிரம் பேருக்கு அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 63 ஆயிரம் பேர் அரசு போக்குவரத்து கழத்தில் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“