scorecardresearch

காஞ்சிபுரம் அருகே பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து: 9 பேர் பலி

காஞ்சிபுரம் அடுத்த வளதோட்டம் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

Container truck fire accident in Avadi Chennai
Fire

காஞ்சிபுரம், குருவி மலை அடுத்த வளதோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் இன்று (மார்ச் 22) மதியம் அங்கு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. குடோன் முழுவதும் தீ பற்றி எரிந்தது.

இதில் குடோனில் வேலை செய்து வந்த 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சிக்கி படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்த வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த வெடி விபத்தில் சிக்கி ஆலையின் உரிமையாளர் சுதர்சன் (31) உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்த 7 பெண்கள் உட்பட 16 ஊழியர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: 8 die in cracker unit fire near kancheepuram