தமிழ்நாட்டில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடக்கி உள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2 தினங்களாக சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சற்று வெப்பம் தணிந்து வருகிறது. குறிப்பாக நேற்று தென் தமிழக பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 13) 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியின் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“