தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பிய போது, தேனி அருகே வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். தேக்கடி-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மலைப்பாதையில் கார் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக அதிகாரி தெரிவித்தார்.
சிறுவர் ஒருவர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர்கள் என்றும் சபரிமலையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதாகவும் அதிகாரி கூறினார்.