/indian-express-tamil/media/media_files/M18XgImIqoEdtXR7qEvK.jpg)
92-வது இந்திய விமானப் படை (IAF) தினம் அக். 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாளை (அக்.6) சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்டமான விமான கண்காட்சி நடைபெற உள்ளது. 72 போர் விமானங்கள் பங்கேற்கும் இந்த விமான கண்காட்சி லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது. கண்காட்சி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள் இங்கே,
1. இந்திய விமானப் படையின் விமான கண்காட்சி நாளை மெரினா கடற்கரையில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
2. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மெரினா கடற்கரையில் நடைபெறும் கண்காட்சியை பார்வையிட உள்ளார்.
3. கண்காட்சியையொட்டி சென்னை காவல்துறை போக்குவரத்து மாற்றங்களை செய்து மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
4. விவேகானந்தர் இல்லத்தின் முன் பிரதான மேடை அமைக்கப்படும். பொதுமக்களுக்கு மெரினா கடற்கரையில் ஏற்பாட செய்யப்பட்டுள்ளது.
5. கண்காட்சியில் இடம் பெறும் விமானங்கள் கலங்கரை விளக்கத்தில் இருந்து புறப்பட்டு இந்திய கடற்படை நிலையம் (INS) அடையார் நோக்கி பறக்கும்.
6. ஆகாஷ் கங்கா அணி, சூர்ய கிரண் ஏரோபாட்டிக் டீம் (SKAT), சாரங் டீம், LCH, தேஜாஸ், சேடக், HTT-40, ரஃபேல், டகோட்டா, பிலட்டஸ் PC-7, ஹார்வர்ட், C-295, DO-228, AEW@C, மிக் 29, IL-78, Mirage, P8i, Jaguar மற்றும் Sukhoi ஆகிய விமானங்கள் நாளை கண்காட்சியில் இடம்பெறுகிறது.
7. மெரினா விமான கண்காட்சியில் சூலூர், தஞ்சாவூர், அரக்கோணம் மற்றும் பெங்களூரில் இருந்து 72 விமானங்கள் பங்கேற்கின்றன.
8. சுமார் 15 லட்சம் பார்வையாளர்கள் இடம் பெறும் இந்த கண்காட்சி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற இந்திய விமானப்படை இலக்கு வைத்துள்ளது.
9. முன்னதாக கடந்த ஆண்டு பிரயாக்ராஜிலும், 2022-ல் சண்டிகரிலும் ஏர் ஷோ நடத்தப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us