train | tiruchendur | குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் கன மழை முதல் அதிகன மழை பெய்துவருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி ஜங்ஷன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
சேர்வலாறு உள்ளிட்ட ஆறுகளில் அணை நீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் பயணிகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையில் அதிகப்படியான மழைப் பொழிவு காரணமாக பயணிகளால் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேற முடியவில்லை. கிட்டத்தட்ட 20 மணி நேரத்துக்கு மேலாக அவர்கள் சிக்கியுள்ளனர்.
அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலமாக உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: தரை வழியாகவும் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன” என அதிகாரி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“