தமிழ்நாட்டில் 9 டி.எஸ்.பி.க்கள் இன்று அதிரடியாக மாற்றப்பட்டனர். திருச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.குத்தாலிங்கம் கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 47 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை
இதற்கிடையில், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை நடத்தினார். 3 மாவட்டத்திற்கும் சவாலாக உள்ள மதுபான கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
மேலும், சட்டம் - ஒழுங்கு குறித்தும், கள்ளச் சாராயம், போதை பொருட்களை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கடலூர் எஸ்.பி., அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது, பொதுமக்கள் மற்றும் புகார் கொடுக்க வருபவர்களிடம் காவல் துறையினர் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“