சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக ஒன்பது நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக, மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்த்தில் உள்ள ஆறு பேர் கடந்த வாரம் பதவியேற்ற நிலையில், தற்போது ஒன்பது வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பதவி வகிக்கும் சுப்பிரமணியம் பிரசாத், மற்றும் வழக்கறிஞர்கள் ஆஷா, செந்தில்குமார், இளவழகன், எமிலியாஸ், புகழேந்தி, சரவணன், ஆனந்த் வெங்கடேஷ், நிர்மல் குமார், ராமசாமி, ராதாகிருஷ்ணன் ஆகியோரை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
ஒரு மாதத்தில் இவர்களின் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களுடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 69 ஆக உயரும். காலியிடங்கள் 6 ஆக குறையும்.