திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் பயணத்தின்போது அவருக்கு பாதுகாப்பு அளிக்க சபாரி உடை அணிந்து பயணிக்கும் தனிப் பாதுகாப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகளும் செல்வார்கள்.
இந்தப் பிரிவில் தற்போது தற்போது 9 பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தற்காற்புக் கலை உள்ளிட்ட பிரிவுகளில் கற்று தேர்ந்த இவர்கள் மு.க. ஸ்டாலினுக்கு தீவிர பாதுகாப்பு அளிப்பார்கள்.
இவர்கள் முதல்வர் பயணத்தின் போது அவரின் கூடவே பயணிப்பார்கள். எக்ஸ் 95 வகை துப்பாக்கி, ஏகே 47 மற்றும் பாதுகாப்பு உடை, அதற்கு மேல் சபாரி சூட் எனக் காணப்படுவார்கள். இவர்கள், கடந்த மார்ச் மாதம் முதல் இவர்கள் முதல்வர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
தற்போது, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாநில போலீஸார் சார்பில் துணை ஆணையர் ஆர்.திருநாவுக்கரசு ஐபிஎஸ் தலைமையில் கோர்செல் என்ற முதல்வர் பாதுகாப்பு பிரிவுவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/