கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்.,) தேசிய அளவில் பொது போக்குவரத்து பயணசீட்டாக பயன்படுத்தும்படி மொபிலிட்டி கார்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
பாரத ஸ்டேட் வங்கியுடன் (SBI) இணைந்து MTC பேருந்துகள், புறநகர் மற்றும் மெட்ரோ ரயில் அமைப்புகள் போன்ற பல போக்குவரத்து அமைப்புகளில் ஸ்வைப் செய்வது மூலம் பயணக்கட்டணத்தை செலுத்தும்படி வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வதற்கு மட்டுமே இந்த கார்டுகள் பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. வருகின்ற நாட்களில் மற்ற போக்குவரத்து வசதிகளுக்கும் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ அதிகாரிகளின் கூற்றுப்படி, இதுவரை 888 பேர் மொபிலிட்டி கார்டை வாங்கியுள்ளனர். “கடந்த ஒரு வாரத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 100 கார்டுகளை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த கார்டுகளுக்கான டாப்-அப் முறையில் நாங்கள் சுமார் ₹1.39 லட்சம் பெற்றுள்ளோம், இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும்” என்று தெரிவித்தார்.
இந்த மொபிலிட்டி கார்டை, இந்தியாவில் பெங்களூரு மெட்ரோ, கான்பூர் மெட்ரோ, எம்.எம்.ஆர்.டி.ஏ., மும்பை லைன் 2ஏ மற்றும் 7, டெல்லி மெட்ரோ ஏர்போர்ட் லைன், மும்பை பேருந்துகள் மற்றும் கோவாவில் உள்ள கடம்பா பேருந்துகள் ஆகியவை இந்த கார்டுகளை பயன்படுத்தி செயல்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil