scorecardresearch

விபத்தில் சிக்கி மூளைச்சாவு; 25 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டதால் ஏழு பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது உள்ளது.

A 25-year-old youth donates his organs
கோயம்புத்தூரில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞர் சீனிவாசன்

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை பகுதியை சேர்ந்தவர் 25 வயதான சீனிவாசன். இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த 29ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் அவிநாசி சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தொட்டிபாளையம் பிரிவு அருகில் சென்ற போது விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.

பலத்த காயமடைந்த சீனிவாசனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சொல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டது.
முதலுதவிக்கு சிகிச்சைக்கு பின்பு அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது பெற்றோர் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்தனர்.
கல்லீரல் சிறுநீரகங்கள் இருதயம் நுரையீரல் தோல் எலும்பு ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே. எம்.சி.எச் மருத்துவமனைக்கும். இருதயம் மற்றொரு சிறுநீரகம் தோல் எலும்பு ஆகியவை கோவையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும். நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: A 25 year old youth donates his organs