Tasmac | Lok Sabha Election | தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில், ஏப்.19ஆம் தேதி உள்பட 17 மற்றும் 18ஆம் தேதிகளிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன்4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மக்களவை தேரதல் நாடு முழுக்க 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி நடைபெறுகிறது.
7ம் கட்டமாக ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவ நடைபெறுகிறது. கேரளத்தில் 2ம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் மற்றும் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
அதிமுக கூட்டணியில் தேமுதிக, புரட்சி பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளும் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“