நீலகிரி மாவட்டம் குன்னூர்அருகே உள்ள உபதலை பகுதியில் குடியிருப்புகள் அதிகம் நிறைந்துள்ளன. இந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவில் பால் மற்றும் தயிரை வாகனத்தில் கொண்டு செல்ல ஏற்றி வைத்துள்ளனர்.
அப்போது, கரடி ஒன்று அங்கிருந்த தயிர், பாலை சுற்றி சுற்றி வந்து வந்து குடித்து சென்றுள்ளது. தயிர் மற்றும் பாலை சாப்பிட்டுவிட்டு அட்டகாசம் செய்யும் கரடியின் வீடியோ காட்சியானது அங்குள்ள குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தற்போது இந்தக் காட்சிகள் குடியிருப்பு வாசிகளை பெரும் அச்சமடைய செய்துள்ளது. எனவே குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என உபதலை பகுதி பொதுமக்கள் குன்னூர் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“