திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைத்தொடரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 15 மணி நேரமாக சிக்கிய பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் நிலை என்ன என்று தெரியவில்லை என கூறப்படுகிறது.
தண்ணீர் பின்னோக்கி ஓடுவதால் பஸ்சானது ஒரே இடத்தில் தத்தளித்த படியே நிற்கிறது. நேற்றிரவு கடைசி ட்ரிப்பாக அந்த பஸ்சில் ஒரு சில பயணிகள் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.
அவர்களும் பஸ்சில் இருந்து இறங்கி சென்றுவிட்டனர். அதே நேரம் பஸ்சின் டிரைவர், கண்டக்டர் ஆகியோரை தொடர்பு கொள்ள முடியாத சூழல் உள்ளது.
இருப்பினும் இருவரும் பாதுகாப்புடன் பஸ்சில் உள்ளதாக போளூர் பணிமனை அதிகாரிகள் கூறி உள்ளனர். வெள்ளத்தின் நடுவில் பஸ் சிக்கி உள்ளதால், தண்ணீர் வடிந்த பின்னரே அவர்களை மீட்க முடியும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 15 மணிநேரம் கடந்தும் பஸ் சிக்கி உள்ளது. அதனுள்ளே தவிக்கும் டிரைவர், கண்டக்டர் இருவருக்கும் உணவு, தண்ணீர் கையிருப்பில் உள்ளதா, மருத்துவ உதவி தேவைப்படுகிறதா என்ற விவரமும் தெரியாமல் அதிகாரிகள் தவித்து போய் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“