ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் 'சாரஸ் மேளா-2023' எனும் மகளிர் சுய உதவி குழுக்களின் தேசிய அளவிலான விற்பனை கண்காட்சி கோவை வ.உ.சி பூங்கா மைதானத்தில் இன்று (மார்ச் 5) முதல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியினை மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று(மார்ச் 5) தொடங்கி வைத்தார்.
Advertisment
அகில இந்திய அளவிலும், தமிழக அளவிலும் மகளிர் சுய உதவி குழுக்களால் தயாரிக்கப்படும் அனைத்து வகையான பொருட்களையும் சந்தைப்படுத்துதல் மற்றும் பாரம்பரிய கைவினை கலைகள், உணவுப் பொருட்களை மக்கள் பயன்படுத்த வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கமாக இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
இதில் மொத்தம் 80 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, கோவா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்கள் தங்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்தியுள்ளனர். மேலும், தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் இருந்தும் மகளிர் சுய உதவி குழுக்கள் அரங்கம் அமைத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 மகளிர் சுய உதவி குழுக்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர்.
தொடக்க விழா நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.