Advertisment

மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு: எந்தெந்த பிரிவுகள் தெரியுமா?

சென்னை ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையான நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
Nov 21, 2023 22:08 IST
New Update
தடுப்பூசி வாங்க அரசுக்கு ரூ2 லட்சம்: மன்சூர் அலிகானுக்கு கோர்ட் உத்தரவு

நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

mansoor-ali-khan | trisha | நடிகர் மன்சூர் அலிகான், “லியோ படத்தில் பெட்ரூம் காட்சி மிஸ் ஆகிவிட்டது. குஷ்பு, ரோஜாவை மெத்தையில் போட்டதுபோல் திரிஷாவை போட முடியவில்லை” என பொருள்படும்படி பேசியிருந்தார்.

இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்குப் பதிலளித்த திரிஷா, “என் தொடர்பாக மன்சூர் அலிகான்  பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் என் கவனத்துக்கு வந்தது. இதில், பாலியல், பெண் வெறுப்பு, மோசமான ரசனையை நான் காண்கிறேன். அவருடன் இனி ஒரு காலமும் படம் நடிக்க மாட்டேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் தனது செயலுக்கு வருத்தம் தெரிக்கவோ, மன்னிப்பு கேட்டவோ மறுத்துவிட்டார். இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை ஆயிரம் விளக்கு காவலர்கள் நடிகர் மன்சூர் அலிகான் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 354 ஏ, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மன்சூர் அலிகான் பேச்சுக்கு குஷ்பு, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் என பலரும் ஆட்சேபம் தெரிவித்திருந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

#Trisha #Mansoor Ali Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment