தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசினால், அண்ணாமலை மேடை ஏற முடியாது என அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடுமையான வார்த்தைகளை பிரயோகப்படுத்திய சசிகலா, அமைச்சர் கீதா ஜீவனை மிரட்டும் வகையில் பேசினார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சசிகலா புஷ்பா மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி வடபாகம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள சசிகலா புஷ்பா வீட்டை, அவர் இல்லாத நேரத்தில் அடித்து நொறுக்கிய அடையாளம் தெரியாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி சிப்காட் போலீசாரிடம் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் சசிகலா வீட்டை அடித்து நொறுக்கியதாக திமுக கவுன்சிலர்கள் அதிர்ஷ்டமணி, ராமகிருஷ்ணன், இசக்கிராஜ் மற்றும் திமுக மகளிரணியை சேர்ந்த 9 பெண்கள் என 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/