அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1 கோடியே 62 லட்சம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான ஆதாரங்களுடன் புகாரை அப்போதைய எதிர்க்கட்சியான திமுக அளித்தது. இந்த வழக்கில் அமலாக்கத் துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த நிலையில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் 178 பேருக்கு சம்மன் அனுப்பி, அதில் 58 பேரிடம் விசாரணை நடத்தி விட்டதாகவும், மீதி 120 பேரிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான வழக்கில் ஏற்கனவே செந்தில் பாலாஜியின் சகோதர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“