pongal-festival | பொங்கல் பண்டிகையின்போது கிராமங்களில் நான்கு நாள்கள் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். பொங்கலுக்கு மறு நாள் மாட்டுப்பொங்கல் அன்றும் ஏராளமான போட்டிகளை மக்கள் நடத்துவார்கள்.
ஸ்பூனில் எழுமிச்சை கொண்டு செல்வது, நடனம், ஆடலும் பாடலும் என போட்டிகள் அமர்களமாக இருக்கும். போட்டிகளை பங்கேற்போருக்கு பரிசுகளை வழங்கப்படும்.
மேலும், மாட்டு பொங்கல் அன்றோ அல்லது அடுத்த நாளோ ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என பண்டிகை இருக்கும். காளைகளை அவிழ்த்துவிட்டு ஓடவிடுவார்கள்.
காணும் பொங்கல் அன்று உறவினர்களை போய் சந்தித்து மகிழ்வார்கள். சுற்றுலா தலங்களுக்கு சென்று மகிழ்வார்கள். பொங்கல் பண்டிகையைப் போல் உற்சாகமாக அற்புதமான பண்டிகை வேறு எதுமே தமிழர்களுக்கு இல்லை என்று சொல்லும் அளவிற்கு சிறப்பாக இருக்கும்.
இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள வாணக்கன்காடு பகுதி இளைஞர்கள் சிலர் வித்தியாசமான போட்டியை அறிவித்துள்ளனர். அந்த போட்டி விமர்சனத்தை ஏற்படுத்தியது. மறுபுறம், சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.
அந்தப் பேனரில், வருகிற 17ஆம் தேதி காணும் பொங்கல் அன்று பீர் குடிக்கும் போட்டி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், 10 பீர் குடித்தால் முதல் பரிசு ரூ.5,024, 9½ பீர் குடித்தால் இரண்டாம் பரிசு ரூ.4,024, 9 பீருக்கு ரூ.3,024 மூன்றாம் பரிசாகவும், 8 பீர் குடித்தால் ரூ.2,024 நான்காம் பரிசாகவும் என அறிவித்துள்ளார்கள்.
கறம்பக்குடி அருகே உள்ள வாணக்கன்காடு ஊராட்சி வாண்டான் விடுதி கிராம இளைஞர்கள் தான் இந்த பீர் குடிக்கும் போட்டி அறிவிப்பினை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
பீர் குடிக்கும் போது வந்தி எடுத்தாலோ, உமட்டினாலோ போட்டியில் இருந்து நீக்கப்படுவார்களாம். பீர் குடித்ததற்கு பணமும் கொடுத்துவிட்டு செல்ல வேண்டுமாம். இந்த பேனர் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
பலரும் வரவேற்றும், கிண்டல் செய்தும் வருகிறார்கள். அதேநேரம் ஒருவர் 10 பீர் எல்லாம் குடிப்பது உடலுக்கு மட்டுமல்ல. உயிருக்கே ஆபத்தானது.
ஆபத்தான இந்த போட்டியை தடை செய்ய வேண்டும். போட்டி நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பிலும் அழுத்தம் தரப்பட்டது.
இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்ட போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் போஸ்டர் அடித்தவரைத் தேடத் தொடங்கினர். போலீசாரின் தேடலில் கறம்பக்குடி தாலுகா வாணக்கன்காடு கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் பிரமுகரான கணேசமூர்த்தி என்பது தெரிய வந்தது.
போலீசார் தேடும்போது சபரிமலையில் இருந்தவர், இன்று காலை வீடு வந்து சேர்ந்தார். அவரை வடகாடு போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
அதில், கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி விளையாட்டாக இந்த போஸ்டரை தயார் செய்து 6 பேர்கள் மட்டுமே உள்ள வாட்ஸ் அப் தளத்தில் பகிர்ந்தேன்.
அதை யாரோ சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துவிட்டனர். இது போல எந்த போட்டியும் நடத்தவில்லை. நடத்தவும் மாட்டோம் என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மக்களை பீதிக்குள்ளாக்கிய போஸ்டர் வெளியிட்ட கணேசமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த போஸ்டரை இனிமேல் யாரும் பகிர வேண்டாம் என்றும் மீறி பகிர்ந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.