/indian-express-tamil/media/media_files/8i03aBUzCG0pDzH227jJ.png)
கபாலீஸ்வரர் கோவிலில் சினிமா பாடலுக்கு நடனம் ஆடி சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Apologies for making dance Video In Kabhalishwar temple 🙏🏻@tnhrcedeptpic.twitter.com/grMAZZrZE8
— Vicky’s thoughts (@Vicky_offi) February 4, 2024
சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் திரைப்பட பாடலுக்கு நடனமாடிய இயைஞர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் இளைஞர்கள் இருவரும் மன்னிப்பு கோரியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை திருக்கோவில் நிர்வாகம் அளித்துள்ளது.
திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ vignesh_k_balan and tejas_haridas என்ற பக்கத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மன்னிப்பு கோரி ட்விட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர்.
அந்த வீடியோவில், “நாங்கள் நல்ல நோக்கத்தில்தான் செய்தோம். ஆனால் இது தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல் இவ்வாறு கோவில்களில் நடனமாட மாட்டோம். சம்பந்தப்பட்ட நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.